தேடு

Monday, September 9, 2013

பிரபஞ்ச அறிவியல்(2)

இந்த பூமியில தோராயமா 83 மில்லியன் ( 8 கோடியே 30பது லட்சம்) உயிரினம் இருக்காம் (அடேங்கப்பா!). அதுல ஒன்னு தான் மனிதர்கள், மானிட மக்கள் தொகை 730 கோடி! அப்படினா ஒவ்வொரு உயிரனத்தின் தொகையும் ( பறக்கறது,ஓட்ரது,நீந்துவது,ஊருவதுனு....) எவ்வளவு இருக்கும்னு கொஞ்சம் கண்ண மூடி யோசிங்க ( ஒரு நிமிசம், இதில பேக்டீரியா, வைரச கணக்குல எடுத்துக்க கூடாது...ங்க்..)..அது சரி இது எல்லா இங்க எதுக்கு (சும்மா ஒரு general knowledgeநு..)...இத்தனை உயிரனங்களையும், உயிர் அற்றவைகளையும் தூக்கிக்கிட்டு சுமார் 3.5 பில்லியன் வருசமா யாருகிட்டயும் கூலி வங்காம, எந்த எதிர் பார்ப்பும் இல்லாம, புருஷனான சூரியன பொண்டாட்டி மாதிரி நம்ம எல்லாத்தையும் வயித்துல சுமந்துக்கிட்டு சுத்தி சுத்தி வந்துக்கிடு இருக்கா இந்த பூமித் தாய்.

சரி, இந்த பூமியின் எடை,அளவு (all physical properties), எல்லாம் அதிக பேருக்கு தெரிந்திருக்கும்,(தெரியலனா ப்லீஸ் Visit: Wikipedia),ஆமா இதை எல்லாம் எப்படி அள்ந்திருப்பாங்க (இத்ற்கு பதில் நீங்களே தேடிக்குங்க, ஏனா எனக்குத்தெரியாது).


இந்த பூமி எங்க தொங்கிக்கிட்டிருக்கு? யாரவது Invisible கயிருனால கட்டித்தொங்க விட்டிருக்கலாம்? அந்த Invisible கயிருக்கு புவியீர்ப்புவிசைனு பேர் வைத்து நம்ம எல்லாத்தையும் ஏமாத்தலாம் ? இந்த பூமி மட்டும் தொங்குனா பிரச்சனை இல்லை, நிலா தொங்குது, சூரியன்,கோடான கோடி நட்ச்சத்திரம்,பால்வளி அண்டம், கோடான கோடி அண்டம், அப்படி இப்படினு எல்லாமே ஒரு இருட்டுக்குள்ள தொங்குது...சரி இதை எல்லாம் பின்னாடி ஒரு நாள் பார்ப்போம்.....


இப்போ நமக்கும் (பூமிக்கும்) நிலாவுக்கும் உள்ள தூரம் 3 லட்சம் கிலோ மீட்டர் (அந்த Apogee,perigee எல்லாம் இப்பவேண்டாம்). ஒரு வேளை நான் ஒரு டார்ச் லைட்ட எடுத்து (அது Laserநு வைத்துக்குவோம்) நிலா மேல அடித்த ரெண்டாவது நொடியில் நம்ம மேல அது அடிக்கும்..அதாவது நிலாவில பட்டு திரும்பி வந்து நம்ம மேல ப்டும் இதுக்கு ரெண்டு நொடி லைட்டுக்கு போதும் (மின்காந்த அலைகள்(EM Waves) எல்லாம் 3 லட்சம் கிலோ மீட்டரை ஒரு நொடியில கடந்திடும்: லைட்டு ஒரு மின்காந்த அலைதான்).

அப்படினா, ஒரு கார் லைட் வேகத்துல போனா இந்த பூமியை ஒரு நொடியல ஆறு முறை சுத்திடலாம்..ங்க்...ஒரு வேளை நம்ம நிலாவிலிருந்தா நமக்கு பூமி எப்படித்தெரியும்,


Earth Rise and Set 

by
~அபி

No comments:

Post a Comment