தேடு

Tuesday, August 13, 2013

பிரபஞ்ச அறிவியல்(1)

மனிதனாக பிறந்த ஒவ்வருவருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த கேள்வி வந்திருக்கும்:

        கடவுள் யார்? நான் யார்? இந்த உலகம் என்ன?  (சத்தியமா இல்லைனு சொல்றீங்களா). நீங்க உங்களுக்கே தெரியாம இந்த கேள்வியை கேட்டிருப்பீங்க, உதாரணத்துக்கு உங்க குழந்தை பருவத்துல கேட்டிருக்கலாம்.  சரி அதுக்கும் ப்ரபஞ்ச அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா?  மேல கேட்ட கேள்விக்கு ரெண்டு பாதையில போய்தான் வழி தேடனும்,
Path 1:
     ஆன்மிகம் ,நீ இங்க இப்படி இருப்பதற்கு உன் முன்வினைப் பயன் தான் காரணம், கடவுள் சொர்கத்துல உக்காந்துகிட்டு இந்த பூலோகத்துல என்ன என்ன நடக்குதுனு மானிட்டர் செய்வார்...இந்த பிரபஞ்சத்தை பார்த்துக்க நிறைய தேவர்களை அசிஷ்டண்டா வைத்திருக்கிறார்...மக்கள் தொகைய குறைப்பதற்கு எமன எடுபடியா வைத்திருக்கார்.....இதை அப்படியே ஏத்துக்கிட்டும் போலாம்...இல்லைனா புலன்விசாரனையும் பன்னலாம் ( சொர்க்கம் எங்கிருக்கு..கடவுள் நம்மை படைத்தார்னா அவர யார் படைத்தா (whose(where) is his/her parents)....நிறையா தத்துவங்களை அனலைஸ் பன்னலாம்)

Path 2:
அறிவியல், எல்லா விளக்கத்திற்கும் ஒரு proof கொடுக்கும், எல்லாத்தையும் சோதனை செய்துதான் ஏத்துக்கும், நமக்கு ஒரு மன த்ருப்தி இருக்கும்.

ஆனா ரெண்டும் தேடருரது என்னமோ ஒரு கேள்விக்கான விடையத்தான், இந்த உலகத்தின் சொந்தக்காரர் யார்? யார் இந்த முழு பிரபஞ்சத்தை யும் கட்டி மேய்க்கிறது?  எதுக்க்கு கோடான கோடான கோடான கோடன கோடி நட்ச்சத்திரங்களில் ஒன்ன மட்டும் செலக்ட் பன்னி கரைக்டான தூரத்தில் வைத்து, 5 மில்லியன் வருடத்திற்கு அப்புறம், மனிதனை படைத்து (அதுவும் DIRECTA இல்ல பரிணாமத்தின் மூலமா)...அவனையே யார் படைத்தான்னு கேட்க்க வைக்கனும்?

இனி நாம் தேடுவும், நமது JOURNEY கீழ இருக்கிற இடத்துல இருந்து ஸ்டார்ட் பன்னுவோம்....

   
இந்த pictureல 6 pixel தமிழ்நடுனு வச்சுகிட்டா, ஒரு பிக்ஸல் கோயம்புத்தூர், அந்த பிக்ஸ்ல
1000 மா வெட்டுனா அதுல ஒன்னு நம்ம ஊரு,அதை ஒரு 100ரா வெட்டுனா அதுல ஒன்னு நம்ம
வீடு,அதை ஒரு 10தா வெட்டுனா அதுல ஒன்னு நான், அல்லது  நீங்க.

by
~அபி