தேடு

Tuesday, October 1, 2013

பிரபஞ்ச அறிவியல்(3)

சரி, நம்ம நிலாவுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தைப் பார்த்தோம், இப்போ இதை கொஞ்சம் சூரியன் வரைக்கும் எக்ஸ்டன்ட் பன்னுவோம், சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர். இதை கொஞ்சம் பெருசா அனலைஸ் ப்ன்னுவோம்.




இனி வரும் அத்தனை postலையும் நாம் பயன்படுத்தப்போகு வாகனம்,
               
                     கார்      ; இன்னோவா
                     வேகம்:  நொடிக்கு (மணிக்கு அல்ல) 100 கிலோ மீட்டர்
              பெட்ரோல்:  சுரபி (எப்பவும் தீராது)
சரி நம்ம கார்ல இந்த  வேகத்துல போனா ( கோயம்புத்தூர்ல இருந்து சென்னை போக 5 செகண்ட் போதும்) சூரியனை அடைய எவ்வளவு நேரம் ஆகும், சின்னதா ஒரு கால்குலேசன்,

    நேரம் = தூரம் / வேகம்

   நேரம் = 150000000 (15 கோடி km) / 360000 ( 3 லட்சத்து 60 ஆயிரம் km per/hour)

சுமாரா ஒரு 416.6 மணிநேரம் ஆகும் (அதாவது 17 நாட்கள்)..பூ...இவ்வளவு தானா....கொஞ்சம் யோசிங்க நம்ம வைத்திறக்கிறது ஹைப்போத்திட்டிக்ல் கார் (அதாகப்ப்ட்டது,அப்படி ஒரு கார ந்ம்ம இன்னும்  கண்டுபுடிக்கள)..ஒரு வேளை நம்ம ஒரு சூப்பர் சானிக் Air Craft டை எடுத்துட்டு போனா எவ்வளவு நேரம் ஆகும், ஏனா நம்ம கிட்டத்தான் அது இருக்கே...எத்தனை நாள் வாடைகைகு கேற்க்கிறது நம்ம அரசாங்கத்துகிட்ட....

    நேரம் = 150000000 (அதே 15 கோடி) / 3600 (நொடிக்கு 1 கிமீ  (1 km/sec))

சுமார் 41666ம்ணிநேரம் ஆகும், அதாவது 1736 நாள், அப்படினா 4.7 வருசம். இது போரதுக்கு மட்டும், திரும்பி வர 4.7 ஆக மொத்தம் 10 வருசம் (சும்மா ஒரு ஆறு மாசம் எக்ஸ்ட்ரா)... 10 வருசம் வாடகைக்கு கிடைக்குமா?.ஆனா ஒளி வேகத்தில் போனா 8 நிமிசம் தான். இதை இன்னும் பிரமாண்டமா பார்க்கனும்னா, மனிதன் சாதாரனமா  5 km/hr வேகத்துல நடக்கிறான், அப்படினா அவ்ன் பிறந்ததில் இருந்து நடக்க ஆரம்பிச்சா சூரியனை அடைய எத்தனை வருசம் ஆகும்,

 நேரம் = 150000000/5

3 கோடி மணிநேரம் ஆகும்,அதாவது 3424 வருடங்கள் ஆகும்! நமக்கு இங்க இருந்து பார்த்தா சூரியன என்னமோ ஒரு சாப்பாட்டு தட்டு சைஸ் தான் இருக்கு, ஆனா அது உண்மையில எவ்வளவு பெருசுனா, அதுக்குள்ள 10 லட்சம் பூமியை போட்டு அமுக்கிடலாம் (கொஞ்சம் கண் மூடி உங்க மனத்திரையில் பாருங்க),அவ்வளவு பிரமாண்டம்


இந்த ரிங்குக்குள்ள ஒரு 100பூமியை போட்டுடலாம். இந்த ரிங்கோட சைஸ் சூரியனின் கோபத்தை பொருத்து மாருபடும். சரி இனி மற்ற கோள்களின் அல்லது நட்சத்திரத்தின் தூரத்தை ஒப்பிட நமக்கு கிலோ மீட்டர் ஸ்கேல் (km) ஒத்து வராது, அதுக்கு பதிலா அஸ்ட்ரானமிக்கல் யுனிட்டை (AU) தான் பயன்படுத்துவோம் (ஒரு சில போஸ்ட்(post) அப்புறம் இதுவும் மாறிடும்)...சரி ஒரு AU னா 15 கோடி கிலோ மீட்டர், அதாவது சூரியனுக்கும் நம்க்கும் உள்ள தூரம். 10 AU னா 10*15 கோடி km = 150 கோடி km,புரியுதா. கீழ உள்ள படத்தை பாருங்க, நம்ம பூமிக்கும் மற்ற கோள்களுக்கும், அடுத்த சூரியனுக்கும் (நட்சத்திரம்) உள்ள தூரம் AUல் உள்ளது, அதை கிலோமீட்டருக்கு மாத்திப் பாருங்க (கொஞ்சம் கண் மூடி ரசியுங்க)


by
அபி

Monday, September 9, 2013

பிரபஞ்ச அறிவியல்(2)

இந்த பூமியில தோராயமா 83 மில்லியன் ( 8 கோடியே 30பது லட்சம்) உயிரினம் இருக்காம் (அடேங்கப்பா!). அதுல ஒன்னு தான் மனிதர்கள், மானிட மக்கள் தொகை 730 கோடி! அப்படினா ஒவ்வொரு உயிரனத்தின் தொகையும் ( பறக்கறது,ஓட்ரது,நீந்துவது,ஊருவதுனு....) எவ்வளவு இருக்கும்னு கொஞ்சம் கண்ண மூடி யோசிங்க ( ஒரு நிமிசம், இதில பேக்டீரியா, வைரச கணக்குல எடுத்துக்க கூடாது...ங்க்..)..அது சரி இது எல்லா இங்க எதுக்கு (சும்மா ஒரு general knowledgeநு..)...இத்தனை உயிரனங்களையும், உயிர் அற்றவைகளையும் தூக்கிக்கிட்டு சுமார் 3.5 பில்லியன் வருசமா யாருகிட்டயும் கூலி வங்காம, எந்த எதிர் பார்ப்பும் இல்லாம, புருஷனான சூரியன பொண்டாட்டி மாதிரி நம்ம எல்லாத்தையும் வயித்துல சுமந்துக்கிட்டு சுத்தி சுத்தி வந்துக்கிடு இருக்கா இந்த பூமித் தாய்.

சரி, இந்த பூமியின் எடை,அளவு (all physical properties), எல்லாம் அதிக பேருக்கு தெரிந்திருக்கும்,(தெரியலனா ப்லீஸ் Visit: Wikipedia),ஆமா இதை எல்லாம் எப்படி அள்ந்திருப்பாங்க (இத்ற்கு பதில் நீங்களே தேடிக்குங்க, ஏனா எனக்குத்தெரியாது).


இந்த பூமி எங்க தொங்கிக்கிட்டிருக்கு? யாரவது Invisible கயிருனால கட்டித்தொங்க விட்டிருக்கலாம்? அந்த Invisible கயிருக்கு புவியீர்ப்புவிசைனு பேர் வைத்து நம்ம எல்லாத்தையும் ஏமாத்தலாம் ? இந்த பூமி மட்டும் தொங்குனா பிரச்சனை இல்லை, நிலா தொங்குது, சூரியன்,கோடான கோடி நட்ச்சத்திரம்,பால்வளி அண்டம், கோடான கோடி அண்டம், அப்படி இப்படினு எல்லாமே ஒரு இருட்டுக்குள்ள தொங்குது...சரி இதை எல்லாம் பின்னாடி ஒரு நாள் பார்ப்போம்.....


இப்போ நமக்கும் (பூமிக்கும்) நிலாவுக்கும் உள்ள தூரம் 3 லட்சம் கிலோ மீட்டர் (அந்த Apogee,perigee எல்லாம் இப்பவேண்டாம்). ஒரு வேளை நான் ஒரு டார்ச் லைட்ட எடுத்து (அது Laserநு வைத்துக்குவோம்) நிலா மேல அடித்த ரெண்டாவது நொடியில் நம்ம மேல அது அடிக்கும்..அதாவது நிலாவில பட்டு திரும்பி வந்து நம்ம மேல ப்டும் இதுக்கு ரெண்டு நொடி லைட்டுக்கு போதும் (மின்காந்த அலைகள்(EM Waves) எல்லாம் 3 லட்சம் கிலோ மீட்டரை ஒரு நொடியில கடந்திடும்: லைட்டு ஒரு மின்காந்த அலைதான்).

அப்படினா, ஒரு கார் லைட் வேகத்துல போனா இந்த பூமியை ஒரு நொடியல ஆறு முறை சுத்திடலாம்..ங்க்...ஒரு வேளை நம்ம நிலாவிலிருந்தா நமக்கு பூமி எப்படித்தெரியும்,


Earth Rise and Set 

by
~அபி

Tuesday, August 13, 2013

பிரபஞ்ச அறிவியல்(1)

மனிதனாக பிறந்த ஒவ்வருவருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த கேள்வி வந்திருக்கும்:

        கடவுள் யார்? நான் யார்? இந்த உலகம் என்ன?  (சத்தியமா இல்லைனு சொல்றீங்களா). நீங்க உங்களுக்கே தெரியாம இந்த கேள்வியை கேட்டிருப்பீங்க, உதாரணத்துக்கு உங்க குழந்தை பருவத்துல கேட்டிருக்கலாம்.  சரி அதுக்கும் ப்ரபஞ்ச அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா?  மேல கேட்ட கேள்விக்கு ரெண்டு பாதையில போய்தான் வழி தேடனும்,
Path 1:
     ஆன்மிகம் ,நீ இங்க இப்படி இருப்பதற்கு உன் முன்வினைப் பயன் தான் காரணம், கடவுள் சொர்கத்துல உக்காந்துகிட்டு இந்த பூலோகத்துல என்ன என்ன நடக்குதுனு மானிட்டர் செய்வார்...இந்த பிரபஞ்சத்தை பார்த்துக்க நிறைய தேவர்களை அசிஷ்டண்டா வைத்திருக்கிறார்...மக்கள் தொகைய குறைப்பதற்கு எமன எடுபடியா வைத்திருக்கார்.....இதை அப்படியே ஏத்துக்கிட்டும் போலாம்...இல்லைனா புலன்விசாரனையும் பன்னலாம் ( சொர்க்கம் எங்கிருக்கு..கடவுள் நம்மை படைத்தார்னா அவர யார் படைத்தா (whose(where) is his/her parents)....நிறையா தத்துவங்களை அனலைஸ் பன்னலாம்)

Path 2:
அறிவியல், எல்லா விளக்கத்திற்கும் ஒரு proof கொடுக்கும், எல்லாத்தையும் சோதனை செய்துதான் ஏத்துக்கும், நமக்கு ஒரு மன த்ருப்தி இருக்கும்.

ஆனா ரெண்டும் தேடருரது என்னமோ ஒரு கேள்விக்கான விடையத்தான், இந்த உலகத்தின் சொந்தக்காரர் யார்? யார் இந்த முழு பிரபஞ்சத்தை யும் கட்டி மேய்க்கிறது?  எதுக்க்கு கோடான கோடான கோடான கோடன கோடி நட்ச்சத்திரங்களில் ஒன்ன மட்டும் செலக்ட் பன்னி கரைக்டான தூரத்தில் வைத்து, 5 மில்லியன் வருடத்திற்கு அப்புறம், மனிதனை படைத்து (அதுவும் DIRECTA இல்ல பரிணாமத்தின் மூலமா)...அவனையே யார் படைத்தான்னு கேட்க்க வைக்கனும்?

இனி நாம் தேடுவும், நமது JOURNEY கீழ இருக்கிற இடத்துல இருந்து ஸ்டார்ட் பன்னுவோம்....

   
இந்த pictureல 6 pixel தமிழ்நடுனு வச்சுகிட்டா, ஒரு பிக்ஸல் கோயம்புத்தூர், அந்த பிக்ஸ்ல
1000 மா வெட்டுனா அதுல ஒன்னு நம்ம ஊரு,அதை ஒரு 100ரா வெட்டுனா அதுல ஒன்னு நம்ம
வீடு,அதை ஒரு 10தா வெட்டுனா அதுல ஒன்னு நான், அல்லது  நீங்க.

by
~அபி