தேடு

Monday, July 18, 2011

இறைவனைக் காணும் வழி-----ராமகிருஷ்ணர்

குரு ஒருவரை, அவருடைய சீடன் கேட்டான், "குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்", என்று.

அவரும், "என்னுடன் வா, காட்டுகிறேன்", என்று கூறி, அந்த சீடனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சீடனின் தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அழுத்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சீடன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.

"எப்படி இருந்தது?", என்று குரு கேட்டார்.

"என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்", என்றான் சீடன்.

"இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்", என்றார், குரு.

No comments:

Post a Comment