தேடு

Sunday, June 26, 2011

இராமகிருஷ்ணர் பொன் மொழிகள்

                         வெண்ணெய் எடுக்க சூரிய உதயத்திற்கு முன்பாக கடைய வேண்டும். பகலில் கடைந்தால் நன்றாகச் சேராது. அதுபோல் சிறுவயதிலேயே ஆன்மிக நெறியில் நின்று மனதைக் கடவுளிடம் செலுத்தினால் தான் இறைக்காட்சி கிடைக்கும்.

                           கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான், செல்வத்தைத் தேடுபவன் அவற்றை அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.

                        குருவின் சக்தியின்மீது திடமான நம்பிக்கை கொண்ட ஒரு சிஷ்யன், குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடந்து போனான். இதைக் கண்ட குரு 'என் பெயருக்கே இவ்வளவு மகிமை இருக்கிறதென்றால், எனக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். இது எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே என்று நினைத்தபடியே, அவரும் தண்ணீரின் மீது நடக்க ஆரம்பித்தார். ஆனால், கால் வைத்தவுடன் மூழ்கிவிட்டார். நம்பிக்கையால் அபூர்வமான காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால், தற்பெருமை அழிவைத் தரும்.

                    மனைவி, மக்கள், பெற்றோர் அனைவருடனும் சேர்ந்து குடும்பமாக வாழுங்கள். ஆனால், உள்ளத்தை மட்டும் கடவுளிடம் இருத்துங்கள். 

           குடிகாரர்கள், குழந்தைகள் இவர்கள் வாய் மூலமாகவும் சிற்சில வேளைகளில் தெய்வீக விஷயங்கள் வெளிவருவதுண்டு.

                    புண்ணிய பாவத்தின் உயர்வு தாழ்வு என்பது மனத்தின் நிலையைப் பொறுத்து அமைவதாகும்.

No comments:

Post a Comment